‘காங்கிரஸுக்கு ஓட்டே இல்ல; கூட்டணியை விட்டு போனால் போகட்டும்’ : திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

 

‘காங்கிரஸுக்கு ஓட்டே இல்ல; கூட்டணியை விட்டு போனால் போகட்டும்’ : திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற  மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  துரைமுருகன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ttn

அதற்கு பதிலளித்த அவர், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி போனால் போகட்டும். அதில் எங்களுக்கு என்ன நஷ்டம். அது எங்கள் ஓட்டு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும்.காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று டி.ஆர். பாலு கூறினார். நான் பதிலையே  கூறிவிட்டேன்’ என்றார். 

ttn

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நான் ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். எனது கருத்தால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. காலம் எப்போதும் நல்ல பதிலைத்தான் சொல்லும்’ என்று கூறியுள்ளார்.