காங்கிரஸில் கராத்தே தியாகராஜனுக்கு கல்தா

காங்கிரஸில் கராத்தே தியாகராஜனுக்கு கல்தா

காலகாலத்துக்கும் இணைந்தே இருப்பது காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி பூசல்களும் என்பதெல்லாம் பழைய கதை. தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் இருந்த காலங்களில் எதிர்கட்சியை எதிர்த்தாவது சில காட்டமான அறிக்கைகள் வந்துக் கொண்டிருக்கும். அழகிரி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்களும் எழவில்லை… எதைப் பற்றியும் கருத்துக்களும் வெளிவரவில்லை. 

thiyagarajan

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த காங்கிரஸ் தலைவருமே பிரச்சாரத்திற்கு  செல்லாமல் போக்கு காட்டினார்கள். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. 
கூட்டணி கட்சிகளின் புண்ணியத்தில் ஜெயித்தோம்… அதற்கும் வேட்டு வெச்சுடுவார் போல தம்பி’ என்று காதுபட காங்கிரஸ் தலைவர்களே கராத்தே தியாகராஜனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். 
இதைத் தொடர்ந்து திமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு கொஞ்சம் காரசாரமாகவே பேசினார். கே.என்.நேருவின் பேச்சு, டெல்லி தலைவர்களின் காது வரைக்கும் போய்,கராத்தே தியாகராஜன் மீது அதிருப்தி எழுந்தது. இதன் காரணமாக, அவசர அவசரமாக, ‘நான் பேசியது என்னுடைய சொந்த கருத்து’ என்று விளக்கம் அளித்திருந்தார் கராத்தே தியாகராஜன்.

thiyagarajan

இந்நிலையில், அவரது விளக்கத்திலும் திருப்தியுறாமல், காங்கிரஸ் கட்சியிலிருந்தே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் கராத்தே தியாகராஜன்.  
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை, கட்சியிலிருந்து  சஸ்பெண்ட் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.  கட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருக்கிறது.