காங்கிரஸின் ஹவாலா மோசடி? நோட்டீஸ் அனுப்பி வருமான வரித்துறை அதிரடி!

 

காங்கிரஸின் ஹவாலா மோசடி? நோட்டீஸ் அனுப்பி வருமான வரித்துறை அதிரடி!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்யும் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதி பெற்றதாக பாரதிய ஜனதா கட்சி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில், ஹவாலா மோசடியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டதாக அதற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tax

ரூ.3300 கோடி ஹவாலா மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ஒன்றிடமிருந்து காங்கிரஸ் கட்சி ரூ.170 கோடி பெற்றுள்ளது. இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் வருமான வரித்துறை கூறியுள்ளது. கட்டுமானத் துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தின் மும்பை, டெல்லி அலுவலகங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.