காங்கிரஸின் முக்கிய தலைவர்களை அடுத்து இன்னொருவருக்கும் செக் வைத்த அமலாக்கத்துறை..!?

 

காங்கிரஸின் முக்கிய தலைவர்களை அடுத்து இன்னொருவருக்கும் செக் வைத்த அமலாக்கத்துறை..!?

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ்க்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது

தமிழ் நாட்டில் பா.சிதம்பரம்,கர்நாடகாவில் சிவகுமார் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தைதை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது கவனத்தை திரும்பியிருக்கிறது அமலாக்கத்துறை!

மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வங்கி சர்க்கரை ஆலைகளுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் கடன் வழங்கி வந்துள்ளது. இதனை திருப்பி செலுத்தாததால் வங்கிக்கு 1000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அமலாகத் துறை

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சரத் பவாருக்கும், அவரது  மருமகன் அஜித் பவார் உள்ளிட்ட சிலருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது ! இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவர் மீதும் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கூட்டுறவு வங்கி மோசடியில் சரத் பவார் ஈடுப்பட்டுள்ளது உறுதியானால் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ்க்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது!