காங்கிரஸின் மாநில கமிட்டிகளை இழுத்து மூடி விடலாம் : ப.சிதம்பரத்தின் ட்வீட் குறித்து ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சனம்!

 

காங்கிரஸின் மாநில கமிட்டிகளை இழுத்து மூடி விடலாம் : ப.சிதம்பரத்தின் ட்வீட் குறித்து ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சனம்!

ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க 8 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.

டெல்லியில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க 8 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.

ttn

இருப்பினும், காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைப் பாராட்டி வருகின்றனர். அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார். 

ttn

அந்த பதிவில், “ஆம் ஆத்மி வென்றது. இந்தியாவில் பல பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் நாட்டை பிளவுபடுத்தும்  ஆபத்தான பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடக்க உள்ள பிற மாநில தேர்தலில் யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்கிய டெல்லி மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார். 

ttn

ப.சிதம்பரத்தின் அந்த பதவிக்கு  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகிளா காங்கிரஸ் தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி  ரீட்வீட் செய்துள்ளார். அதில், “பா.ஜ.கவை தோற்கடிக்கும் பொறுப்பை நாம் மாநில கட்சிகளுக்கு கொடுத்து விட்டோமா? இல்லையென்றால், நாம் ஏன் ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடுகிறோம். இப்படியே நடந்து கொண்டிருந்தாள் நாம் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளை இழுத்து மூட வேண்டியது தான். “என்று விமர்சனம் செய்துள்ளார்.