காங்கிரஸின் சக்தி ஆப் வெளியிட்ட ஆடியோ: ஆம் ஆத்மி கூட்டணிக்கு சம்மதமா?

 

காங்கிரஸின் சக்தி ஆப் வெளியிட்ட ஆடியோ: ஆம் ஆத்மி கூட்டணிக்கு சம்மதமா?

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து டெல்லியில் உள்ள தொண்டர்களிடம் கருத்து கேட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதுகுறித்து ஆடியோ க்ளிப் ஒன்றை தங்கள் சக்தி ஆப் மூலம் வெளியிட்டுள்ளது.  இன்றுடன் இந்த கருத்துக் கணிப்பு நிறைவடைகிறது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி என காங்கிரஸ் கட்சியினர் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். 

shakti

இந்த மாத இறுதிக்குள் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. 

அரவிந்த கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை, இதனால் ஹரியானாவில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் ஜேஜேபி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட்டடால் பாஜக 10 தொகுதிகளை இழப்பது நிச்சயம், இதனை ராகுல் ஆலோசிக்க வேண்டும் என பதிவி செய்திருக்கிறார்.

முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என காங்கிரஸ் அறிவித்ததும், காங்கிரஸை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.