காக்டெய்ல்; யோகி பாபுவும், ஆஸ்திரேலிய பறவையும்?!..

 

காக்டெய்ல்; யோகி பாபுவும், ஆஸ்திரேலிய பறவையும்?!..

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் ‘காக்டெய்ல்’ என்ற ஆஸ்திரேலிய பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்திய சினிமாவில் பறவை முக்கிய கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறை.

பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் முருகன் இயக்கும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு பெண்மணியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இதில் சாயாஜி ஷிண்டே, மனோ பாலா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

adfdsfd

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் ‘காக்டெய்ல்’ என்ற ஆஸ்திரேலிய பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்திய சினிமாவில் பறவை முக்கிய கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. யோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள்.கொலையானது யார்??  அந்த கொலையை செய்தது யார்??? இதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள்?? இதில்  பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை. இடைவேளைக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு கார் பயணமாகவே இக்கதை விறுவிறுப்பாக இருக்கும் என்கிறது படக்குழு.

zdvdav

இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இசையமைக்கிறார். பிஜி முத்தையாவின் சீடரான ரவீன் ஒளிப்பதிவு வேலைகளை கவனிக்கிறார். எடிட்டிங்குக்கு எஸ்.என்.பாசில், சண்டைக்கு திலீப் சுப்பராயன் என இந்த டீம் களமிறங்கியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது “காக்டெய்ல்” குழு.

இதையும் வாசிக்க: பொறுமையை இழந்த ‘கூல் கேப்டன்’: அம்பயரிடம் கடும் வாக்குவாதம்; அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!