காக்க வைத்த முதல்வர்… கடுப்பில் வெளியேறிய இயக்குனர் இமயம் பாரதிராஜா!?

 

காக்க வைத்த முதல்வர்… கடுப்பில் வெளியேறிய இயக்குனர் இமயம் பாரதிராஜா!?

இளையரஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கும் நடந்த கருத்து மோதலில் அதிக மன வருத்தத்தில் இருப்பது இளையராஜாவின் நண்பர் பாரதிராஜாதான். அவர் இந்த விஷயத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தும் பிரசாத் நிர்வாகம் இளையராஜாவை காலி செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பது  பாரதிராஜாவை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதோடு இத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருந்த இளையராஜாவிற்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் முழு மனதோடு அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதும் பாரதிராஜாவின் மன வருத்தத்திற்கு காரணம்

இளையரஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கும் நடந்த கருத்து மோதலில் அதிக மன வருத்தத்தில் இருப்பது இளையராஜாவின் நண்பர் பாரதிராஜாதான். அவர் இந்த விஷயத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தும் பிரசாத் நிர்வாகம் இளையராஜாவை காலி செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பது  பாரதிராஜாவை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

bharathi

அதோடு இத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருந்த இளையராஜாவிற்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் முழு மனதோடு அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதும் பாரதிராஜாவின் மன வருத்தத்திற்கு காரணம். ஒரு காலத்தில் இளையராஜா யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லோரும் இந்த நேரத்தில் அவரை கைவிட்டு விட்டார்கள்!

இசை அறிவை தேடிக்கொண்டதைப் போல மனிதர்களையும் ராஜா தேடிக்கொள்ளவில்லையே  என்ற ஆதங்கத்தில் பாரதிராஜா  இருக்கிறார். அதே சமயம் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை. நண்பனுக்காக கடைசிவரை பார்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார் பாரதிராஜா. 

ilayaraja

தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக இளையராஜாவிற்கு ஸ்டுடியோ கட்ட பிரசாத் நிர்வாகத்திடம் கேட்பதற்கு பதிலாக அரசு சார்பாக ஒரு இடத்தை வாங்கிக்கொடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச்செயுத இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு  ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு தமிழக அரசை அனுக நினைத்தார் பாரதிராஜா. இதை ஒரு மனுவாக எடுத்துக்கொண்டு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தார். 

edapadi

அவருக்கு ஒரு நேரமும் கொடுக்கப்பட்டது. கோட்டைக்கு பல முறை எம்.ஜி.ஆரையும்.ஜெயலலிதாவையும் சந்திக்க சென்றிருந்த பாரதிராஜா வெகு நாட்களுக்குபிறகு  முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியை சந்திக்க போனார். அவர் போனதும் முதல்வர் பிஸியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அழைப்பு வரவில்லை. இதனால் டென்சன் ஆன பாரதிராஜா முதல்வரை சந்திக்காமலே கோட்டையிலிருந்து வேகமாக புறப்பட்டு வந்துவிட்டாராம். இளையராஜாவுக்காக பாரதிராஜாவின் இந்த போராட்டம் நெகிழ வைப்பதாக உள்ளது.