காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் பள்ளி நண்பர்களை சந்தித்த கமல் ஹாசன்

 

காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் பள்ளி நண்பர்களை சந்தித்த கமல் ஹாசன்

தன்னுடன் படித்த நண்பர்களைச் சந்தித்துள்ளார். அப்பள்ளியின்  1970 ஆம் ஆண்டு மாணவர்களின்  ரீயூனியன் நிகழ்ச்சி நடந்தது.

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  அவர் அரிதாரம் பூசாத வேடங்களே இல்லை. நடிகர் என்று சின்ன வட்டத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத கமல் இயக்குநர்,  தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர்  என பன்முக தன்மை கொண்டவர். கமல் ஹாசன் சாதனை நாயகனாக  உள்ள கமல் பள்ளி படிப்போடு நிறுத்தி கொண்டவர். 

ttn

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளியில் 1970ம் ஆண்டு படித்த கமல் நேற்று  தன்னுடன் படித்த நண்பர்களைச் சந்தித்துள்ளார். அப்பள்ளியின்  1970 ஆம் ஆண்டு மாணவர்களின்  ரீயூனியன் நிகழ்ச்சி நடந்தது.

ttn

இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதில் பள்ளியின் சீருடையான காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் அனைவரும் கலந்து கொண்டனர்.அதேபோல் கமலும்  அணிந்து சென்று பள்ளியை சக பள்ளி நண்பர்களுடன் வலம்வந்தார். அங்குள்ள தனது வகுப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வுக்கூடம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தார். 

இந்த நிகழ்ச்சியில் கமலுடன் படித்த 20பேர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு அனைவரும் இணைந்து புரொஜக்டர் ஒன்றை பரிசாக வழங்கினர். இதுகுறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நண்பர்கள்!! இன்றைய நமது சந்திப்பு, என்னை சமநிலைப்படுத்தும் பல நிகழ்வுகளில் ஒன்று. தொடர்ந்து கற்போம்,கற்ற கை மண்ணளவை, பிறந்த மண் போல் காப்போம்.மகிழ்ந்தேன், தெளிந்தேன்’ என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.