காக்கிச்சட்டை என்றால் கடுகடுப்பு மட்டுமல்ல கருணையும் உண்டு! உ.பி. காவலர்களின் நெகிழ்ச்சி செயல்

காக்கிச்சட்டை என்றால் கடுகடுப்பு மட்டுமல்ல கருணையும் உண்டு! உ.பி. காவலர்களின் நெகிழ்ச்சி செயல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஆதரவற்ற பெண்ணின் உடலை சுமந்துச் சென்று இறுதி சடங்குகள் செய்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஆதரவற்ற பெண்ணின் உடலை சுமந்துச் சென்று இறுதி சடங்குகள் செய்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

சஹரன்பூர் மாவட்டம் கிஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவர் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த அப்பெண் திடீரென உயிரிழந்தார். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராத அவல நிலை ஏற்பட்டது.

police

இதனை அறிந்த, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மூத்த சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ) தீபக் சவுத்ரி மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் கவுரவ் குமார் மற்றும் வினோத் குமார் ஆகியோர் மீனாவின் உடலை சுமந்துச்சென்று இறுதி சடங்குகளை முன்நின்று நடத்தினர். காவல்துறையினரின் இந்த செயல் மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.