கஸ்டமர் தகவல்களை திருடுனதுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு 1500 கோடி ஃபைனை போடேய்!

 

கஸ்டமர் தகவல்களை திருடுனதுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு 1500 கோடி ஃபைனை போடேய்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் கவனத்திற்கு இது வருவதற்குள், மூன்று லட்சத்து 80,000 வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடுபோயின. வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடுபோன குற்றத்திற்காக சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் அபராதத்தை எதிர்கொண்டுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்.

கடந்த வருடம் ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதிவரை 16 நாட்கள் இடைவெளியில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளத்தில் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டிருந்தனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் கவனத்திற்கு இது வருவதற்குள், மூன்று லட்சத்து 80,000 வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடுபோயின. வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடுபோன குற்றத்திற்காக சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் அபராதத்தை எதிர்கொண்டுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்.

British Airways

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடுபோவதை தடுக்க, கடந்த ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான சட்டங்களை கொண்டுவந்தது. வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடுபோவதற்காக அபராதம் விதிக்கப்படுவது இதுநாள்வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. ஆனால், புதிய சட்டத்தின்கீழ் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹேக்கர்கள் கைவரிசையை காட்டுனத்துக்கு எங்கமேல இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது துரதிருஷ்டம்வசமானது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.