‘கஷாயம் காய்ச்சுவது போல கள்ளச்சாராயம் காய்ச்சுவோம்’- கணவன், மனைவி சேர்ந்து விற்ற சாராயம்..  

‘கஷாயம் காய்ச்சுவது போல கள்ளச்சாராயம் காய்ச்சுவோம்’- கணவன், மனைவி சேர்ந்து விற்ற சாராயம்..  

கோயம்புத்தூரில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற ஒரு பெண் உள்பட இரண்டு பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து நான்கு லிட்டர் சாராயத்தினை போலீசார் கைப்பற்றினார்கள்.

கோயம்புத்தூரில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற ஒரு பெண் உள்பட இரண்டு பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து நான்கு லிட்டர் சாராயத்தினை போலீசார் கைப்பற்றினார்கள்.
நம் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஒயின் ஷாப் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். 
சுலூரில் உள்ள அந்தக்கப்பாளையம் அருகே செம்மோஷி நாகரத்தைச் சேர்ந்த சரஸ்வதி (56), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.முருகேசன் (46) மற்றும்  சரஸ்வதியின் 63 வயது கணவர் பி.சின்னகுட்டி ஆகியோர் கரியம்பாளையத்தில் உள்ள மைலம்பட்டி கல்லறைக்கு அருகில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்வது பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனையம் சரஸ்வதியையும் கைது செய்தார்கள். அவருடன் இருந்த சின்னகுட்டி தப்பித்து ஓடிவிட்டார். சின்னக்குட்டியை  கைது செய்ய போலீஸ் ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளனர் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.