கவிழ்ந்து விழுந்த ஆம்னி பஸ் : ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் நடந்த விபரீதம்!

 

கவிழ்ந்து விழுந்த ஆம்னி பஸ் : ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் நடந்த விபரீதம்!

சென்னை கோயம்பேட்டில் இருந்து எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தை நாகர்கோவிலைச் சேர்ந்த சத்யராஜ் பாபு என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். பேருந்து உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை தாண்டியவுடன் ஓட்டுநர் கண் அசந்துள்ளார். அப்போது திடீரென பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில், ஓட்டுநர் சத்யராஜுக்கு பின்புறம் இருந்த கண்ணாடி குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் இருந்த 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

ttn

விபத்தைக் கண்ட பொதுமக்கள், பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து பேருந்தின் உள்ளே இருந்தவர்களை மீட்டனர். அதன் பின்னர், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துக் காவல் துறையினர், ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 10 நாட்களாகச் சபரிமலைக்குப் பேருந்தை ஒட்டிச் சென்றதாகவும், ஓய்வு இல்லாததால் கண் அசந்ததாகவும் தெரிவித்துள்ளார்.