கவிழப்போகிறது ஓலா டாக்சி..!? துரத்தும் நிதி சிக்கல் !

 

கவிழப்போகிறது  ஓலா டாக்சி..!? துரத்தும் நிதி சிக்கல் !

நாட்டிலேயே பெரிய வாடகைக்கார் நிறுவனமான ஓலா கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. இதை நடத்தி வருவது ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம்.

நாட்டிலேயே பெரிய வாடகைக்கார் நிறுவனமான ஓலா கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. இதை நடத்தி வருவது ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம். இது கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 60% சரிவை சந்தித்து இருக்கிறது. 

ttn

இந்த 60% சரிவு என்பது 1160 கோடி ரூபாய்.இந்த பணம் , ஓலா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தரும் போனஸ்கள்,நிறுவன விளம்பரங்கள், வளர்ச்சி திட்டங்களால் இந்த சரிவு ஏற்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.கடந்த ஆண்டில் ஓலாவின் மொத்தச் செலவு 3315 கோடி ரூபாய். இந்தப் பணத்தில் 1700 கோடியை அது ஓட்டுனர்களுக்கு செலவிட்டது.அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்தத் தொகை 2,400 கோடியாக இருந்திருக்கிறது. 

ttn

இப்போது ஓலா தன் வருமானத்தில் சந்தித்து இருக்கும் சரிவால்  நடப்பு ஆண்டில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை குறைக்கப்படும்.மற்ற செலவுகளையும் குறைத்து சிக்கன நடவடிக்கையில் ஓலா இறங்க்கூடும்.அதோடு,ஓய்வூதியம், காப்பீடு, கூடுதல் பணி நேரங்களுக்கான படிகள்,போன்றவையும் நிறுத்தப்பட ,அல்லது வெகுவாகக் குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. 

ttn

இந்தியா முழுவதும் 20 லட்சம் ஓட்டுனர்கள் ஓலா டாக்சியில் பணியாற்றுகிறார்கள்.இனி இப்போது வழங்கப்படும் ஊக்கத் தொகையும் குறைக்கப் பட்டால் அந்த நிறுவனத்தின் கதியும்,அந்த 20 லட்சம் ஓட்டுனர்களின் கதியும் என்னவாகும்?.ஒரு வேளை நமது நிதியமைச்சரிடம் கேட்டால்’ நான் ஆட்டோ டாக்சியில் போகிற குடும்பத்தில் இருந்து வரவில்லை.நாங்களெல்லாம் ரிக்‌ஷா அல்லது குதிரை வண்டிதான் என்று சொல்லக்கூடும்.