கவின்-லாஸ்லியா காதல்: நீங்க பாக்குற வேலை பெயர் என்ன? விஜய் டீவியை கிழித்துத் தொங்கவிட்ட நெட்டிசன்

 

கவின்-லாஸ்லியா காதல்: நீங்க பாக்குற வேலை பெயர் என்ன? விஜய் டீவியை கிழித்துத் தொங்கவிட்ட நெட்டிசன்

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

கவின்-லாஸ்லியா காதல்: நீங்க பாக்குற வேலை பெயர் என்ன? விஜய் டீவியை கிழித்துத் தொங்கவிட்ட நெட்டிசன்

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை அந்த விட்டில் சுற்றிவரும் ஒரு விஷயம் காதல். முதலில் கவின், லாஸ்லியா, சாக்ஷியின் முக்கோண காதல் கதை ஒளிபரப்பானது. அது சற்று போர் அடித்துவிட்டதால் அதிலிருந்து சாக்ஷியை எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். சாக்ஷி சென்ற பிறகு கவின்- லாஸ்லியா மிக நெருக்கமாகவுள்ளனர். ஆனால் அது எல்லாம் காதல் இல்லை வெறும் நட்பு தான் என்று மக்களை ஏமாற்றிக்கொண்டு இருந்தனர். 

இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கவின், லாஸ்லியாவிடம், ‘சேரன் அண்ணா என்கிட்ட சில விஷயம் சொன்னாங்க. அவள நான் ஒரு குழந்தை மாறி தான் பார்த்துப்பேன்னு சொன்னேன்’ என்று கூறியுள்ளார். 

அதற்கு லாஸ்லியா, ‘முன்னாடி எனக்கு உன்னை பிடிக்கும்.இப்போ ரொம்ப பிடிக்கும்’ என்று வெட்க பட்டுக்கொண்டே பேசுவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.