‘கவின்- லாஸ்லியா காதலை மட்டுமே காட்டாதீங்க’: உச்சக்கட்ட கடுப்பில் பிக் பாஸ் ரசிகர்கள் 

 

‘கவின்- லாஸ்லியா காதலை மட்டுமே காட்டாதீங்க’: உச்சக்கட்ட கடுப்பில் பிக் பாஸ் ரசிகர்கள் 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை அந்த விட்டில் சுற்றிவரும் ஒரு விஷயம் காதல். முதலில் கவின், லாஸ்லியா, சாக்ஷியின் முக்கோண காதல் கதை ஒளிபரப்பானது. அது சற்று போர் அடித்துவிட்டதால் அதிலிருந்து சாக்ஷியை எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். சாக்ஷி சென்ற பிறகு கவின்- லாஸ்லியா மிக நெருக்கமாகவுள்ளனர். 

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகி வருவதாகக் கூறினார். ஆனால் நாட்கள் செல்லச்செல்லத் தான் இவர்கள் காதலில் விழுந்தது தெரியவந்தது. அதிலிருந்து விஜய் தொலைக்காட்சி இவர்களின் காதல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதையே ஒளிபரப்பி வருகிறது. தற்போது இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

#Day61 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/UbMS8k0T4o
— Vijay Television (@vijaytelevision) August 23, 2019

அதில் வழக்கம் போல் கவின்- லாஸ்லியா பேசுவது போல் உள்ளது. இதை கண்ட ரசிகர்கள், ‘கவின்- லாஸ்லியா காதலை மட்டுமே காட்டாதீங்க’ என்று கமெண்ட் செய்துள்ளனர்.