கவின் – சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா 

 

கவின் – சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ்யில் பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் கடலை போடும் இவரின் செயல் பார்வையாளர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் அபி இவரிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் ஒழுக்கமாக அதிலிருந்து விளக்கினார். 

ஆனால் நாட்கள் செல்ல, செல்லத் தான் இவரின் உண்மையான குணம் வெளி வந்துள்ளது. ஒரே நேரத்தில் சாக்ஷி மாற்று லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்து வருகிறார். ஆனால் கவினின் குணத்தைப் புரிந்து கொண்ட லாஸ்லியா அவரிடம் வெறும் நட்பாக மட்டுமே பழகி வருகிறார். 

losliya

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில், சாக்ஷி மற்றும் மீரா ஜெயிலில் உள்ளனர். அப்போது அங்குச் சென்ற லாஸ்லியா, சாக்ஷியிடம் கவின் குறித்து சிபாரிசு செய்துள்ளார். அதில், ‘ப்ளீஸ் எனக்காக இரண்டு பெரும் ஒகே ஆகுங்க. நான் எவளோ நாள் இருப்பனு தெரியல, நான் இருக்கும் வரை என்னால் பார்க்க இயலவில்லை. அவனும் பீல் பன்றான். கட்டாயமாக இது லவ் இல்ல, ஆனா கவினை எனக்கு பிடிக்கும்’ என்று கூறுகிறார். 

இதற்குப் பதிலளித்த சாக்ஷி, ‘அவனுக்கு என் மேல possessiveness வந்துட்டு இருக்கு. சோ எனக்கு மட்டும் என் வரக்கூடாது? என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த லாஸ்லியா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.