கவினை சந்தித்த லாஸ்லியா: முதன்முறையாக வெளியான புகைப்படம்!

 

கவினை சந்தித்த லாஸ்லியா: முதன்முறையாக வெளியான புகைப்படம்!

இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் -லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

losliya

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கி 105 நாட்களுடன்  சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இந்த சீசனில் பெரிதும் பேசும் பொருளானது கவின் – லாஸ்லியா காதல் தான். நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் சக போட்டியாளர்கள் சந்தித்துக் கொண்ட நிலையில் கவின் – லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை.

 

இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளனர். இந்த  நிகழ்ச்சியில் கவின் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வந்துள்ளார். லாஸ்லியா மாடர்ன் புடவையில் வந்துள்ளார்.  

losliya

இருவரும் படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் லாஸ்லியா கவின் இருவரும் இணைந்து ஒன்றாக பாடலுக்கு நடனம் ஆடுவார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.