கவர்ச்சி தியானம் செய்த ராய் லட்சுமி! வைரலாகும் புகைப்படங்கள்!

 

கவர்ச்சி தியானம் செய்த ராய் லட்சுமி! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ராய் லட்சுமி தியானம் செய்வது போன்று வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

சென்னை: நடிகை ராய் லட்சுமி தியானம் செய்வது போன்று வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார். அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

இவர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ஜூலி 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். பின்பு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தவறாமல் பதிவு செய்து வருகிறார்.

raai laxmi

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி ஜிம்மில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு, தியானம் செய்வது போன்ற  புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.