கவர்ச்சியின் உச்சத்தில் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா: வைரல் புகைப்படங்கள்!

 

கவர்ச்சியின் உச்சத்தில் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா: வைரல் புகைப்படங்கள்!

நடிகை பிரியங்கா சோப்ரா கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்தலான ஆடையில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

நடிகை பிரியங்கா சோப்ரா கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்தலான ஆடையில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

72-வது சர்வதேச திரைப்பட விழாவான ‘கேன்ஸ் திரைப்பட விழா’, மே 14-ம் தேதி பிரான்ஸில் கோலாகலமாகத் தொடங்கியது.  இதில், உலகமெங்கிலுமிருந்து பல்வேறு விதமான  திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவை   திரையிடப்பட்டன. Jim Jarmusch இயக்கத்தில் உருவாகியிருக்கும் The Dead Don’t Die எனும் ஜோம்பி நகைச்சுவை திரைப்படம்தான் முதலில் ஒளிபரப்பப்பட்டது. விழாவின் லத்தீன் அமெரிக்கரான இயக்குநர் Alejandro González Iñárritu, முதல்முறையாக ஜூரி குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cannes 2019 @red #5BFilm

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

கேன்ஸ் திரைப்பட விழாவில்   ஐஸ்வர்யா ராய் பச்சன், மல்லிகா ஷெராவத், சோனம் கபூர், தீபிகா படுகோன், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.  

arr

பிரியங்கா சோப்ரா, டயானா பென்ட்டி மற்றும் ஹீனா கான் போன்றவர்கள் இதில் முதல்முறையாகப் பங்கேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவி சாய்ராவுடன் கேன்ஸ் தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Day time.. play time. #Cannes2019

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா அசத்தலான ஆடை அணிந்து கொண்டு கணவர் நிக் ஜோன்ஸுடன் கலந்து கொண்டார். கற்கள் பதிக்கப்பட்ட சிம்பிலான உடை மற்றும் மேக்-அப்பில் மிடுக்காகத் தோன்றிய பிரியங்காவைப் புகைப்பட கலைஞர்கள் போட்டோ எடுத்துத் தள்ளினர். பிரியங்கா அணிந்திருந்த ஆடையானது தோழி  மேகன் மார்கிலின் மாமியாரான இளவரசி டயானா உடுத்தியிருந்த உடையைப் போலவே இருந்தது. மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒருமுறை கலந்து கொண்ட போது, இதே வடிவிலான ஆடையைத் தான் அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படத்தையும் பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@red #5BFilm

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பு தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரின் ஆடை மற்றும் மேக்கப் வலைதளவாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.