கழுவி ஊற்றிய டிவிட்டர்வாசிகள்….போலி வீடியோவை டெலிட் செய்த இம்ரான் கான்!

 

கழுவி ஊற்றிய டிவிட்டர்வாசிகள்….போலி வீடியோவை டெலிட் செய்த இம்ரான் கான்!

வங்கதேசத்தில் தனிநபரை அந்நாட்டு போலீசார் தாக்கும் வீடியோவை இந்தியாவில் நடப்பதாக டிவிட்டரில் பதிவேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டிவிட்டர்வாசிகள் வறுத்தெடுத்தனர். இதனையடுத்து அந்த போலி வீடியோவை அவர் டெலிட் செய்து விட்டார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது முதல் பாகிஸ்தான் நம் நாட்டின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறது. அதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் நேற்று டிவிட்டரில், உத்தர பிரதேசத்தில் இந்திய போலீசாரின் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை என்ற தலைப்பிட்டு போலீசார் தனிநபர்களை தாக்கும் ஒரு  வீடியோவை பதிவு செய்து இருந்தார். 

இம்ரான் கான் வெளியிட்ட வீடியோ

இம்ரானின் அந்த பதிவு வேகமாக பரவியது. அதேசமயம் அந்த வீடியோ போலி என்பதை டிவிட்டர்வாசிகள் கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில் இருக்கும் காட்சி வங்கதேத்தில் அந்நாட்டு போலீசார் வன்முறையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது என்பது தெரியவந்தது. இதனையடுத்து டிவிட்டர்வாசிகள் இம்ரான் கானை கழுவி ஊற்றினர். டிவிட்டர்வாசி ஒருவர், நீங்களும், உங்க நாடும் மனித உரிமைகள் மற்றும் மத சிறுபான்மையினர் குறித்து கவலைப்படுவது போன்று இந்த வீடியோவும் போலியானது.

மலீஹா லோதி

காசாவில் காயம் அடைந்த சிறுமியை காஷ்மீர் புல்லட் துப்பாக்கி சூட்டில் காயம் பெண் மலீஹா  லோதி உலக அரங்கில் சித்தரித்தார். போலி மற்றும் பொய் பேசும் ஒரு நாட்டிலிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என காட்டமாக பதிவு செய்து இருந்தார். வீடியோ குறித்த உண்மையை டிவிட்டர்வாசிகள் கண்டுபிடித்ததால் அந்த டிவிட்டை இம்ரான் நீக்கிவிட்டார்.