கழுத்தை நெரிக்கும் கடன்: மிகப்பெரிய பூங்காவை அடகு வைக்கும் பாகிஸ்தான்!

 

கழுத்தை நெரிக்கும் கடன்: மிகப்பெரிய பூங்காவை அடகு வைக்கும் பாகிஸ்தான்!

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிலேயே மிகப்பெரிய பூங்காவை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடிக்கு இம்ரான் கான் அரசு அடமானம் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா பேரிடரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிவருகிறது. அந்த நாடுகள் கடனைச் செலுத்துமாறு வலியுறுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கழுத்தை நெரிக்கும் கடன்: மிகப்பெரிய பூங்காவை அடகு வைக்கும் பாகிஸ்தான்!

எனினும், சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. தற்போது கடன் செலுத்தும் தொகை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைச் சமாளிக்க பாகிஸ்தானில் இருக்கும் மிகப்பெரிய பூங்கா ஒன்றை இம்ரான் கான் அரசு அடமானம் வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஃபாத்திமா ஜின்னாவின் (முகமது அலி ஜின்னாவின் தங்கை) நினைவாக இஸ்லாமாபாத்தில் உருவாக்கப்பட்ட எஃப்-9 பூங்கா சுமார் 759 ஏக்கர் பரப்பளவில் கொண்டது. இப்பூங்கா நாட்டிலேயே அதிக பசுமையான பகுதிகளைச் சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய பூங்கா.

இப்பூங்காவை அடமானம் வைப்பதற்கான ஒப்புதலை வழங்க நாளை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.

கழுத்தை நெரிக்கும் கடன்: மிகப்பெரிய பூங்காவை அடகு வைக்கும் பாகிஸ்தான்!

அடமானம் வைக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், சாத்திரமாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் தலைநகர் (இஸ்லாமாபாத்) மேம்பாட்டு ஆணையம் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை முன்கூட்டியே வழங்கிவிட்டது. நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு இறுதிசெய்யப்படும்.

பாகிஸ்தான் அரசு இதுபோன்று நாட்டின் உடமைகளை அடகு வைப்பது முதல் முறையல்ல என்று கூறப்படுகிறது. இதற்கு முந்தைய அரசுகள் சாலைகள், கட்டடங்கள், நிறுவனங்களை அடகு வைத்து கடன் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கழுத்தை நெரிக்கும் கடன்: மிகப்பெரிய பூங்காவை அடகு வைக்கும் பாகிஸ்தான்!

எஃப்-9 பூங்காவை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடிக்கு (இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய்) அடமானம் வைக்கப்போவதாகக் கூறப்பட்டுள்ளது. முறைப்படியான அறிவிப்பு நாளை வெளியாகும்.