‘கழுத்தில் மலைப்பாம்பு… வீட்டில் 140 பாம்புகள்’ : மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்!

 

‘கழுத்தில் மலைப்பாம்பு… வீட்டில் 140 பாம்புகள்’ : மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்!

நாய், பூனை, முயல்,ஆமை  என்பது போய்  ஆபத்தானதாகக்  கருதப்படும் சிங்கம், முதலை, பாம்பு,   கசோவாரி பறவை போன்றவற்றையும் வளர்த்து வியப்பில்  ஆழ்த்தி வருகின்றனர். 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு விஷயத்தில் நாட்டம் அதிகம். அதில் சமீபகாலமாகச் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பலரும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர். நாய், பூனை, முயல்,ஆமை  என்பது போய்  ஆபத்தானதாகக்  கருதப்படும் சிங்கம், முதலை, பாம்பு,   கசோவாரி பறவை போன்றவற்றையும் வளர்த்து வியப்பில்  ஆழ்த்தி வருகின்றனர். 

ttn

அந்த வகையில் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள ஆக்ஸ்போர்ட் பகுதியில் வசித்து வந்த  லாரா ஹர்ஸ்ட் என்ற 36 வயதான பெண்மணி ஒருவர் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது, அவரது கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றி இருந்தது. இதனால் பாம்பு கழுத்தை இறுக்கியதால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ttn

மலைப்பாம்பு அங்கு எப்படி வந்தது என்று போலீசார் வீட்டில் சோதனையிட்ட போதுதான், லாரா வீட்டில் சுமார் 140 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. லாரா 20 பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நிலையில் எப்படி அவர் வீட்டுக்குள் 140 பாம்புகள் வந்தது என்று போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். லாராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர். 

ttn

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 75 வயதான மார்வின் ஹாஜொஸ் என்ற முதியவரை அவர் ஆசையாக வளர்த்த கசோவாரி பறவை அலகால் கொத்திக் கொன்றது குறிப்பிடத்தக்கது.