‘கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு’ : கிளாஸ் மற்றும் மாஸாக இருக்கும் பிகில் செகண்ட் லுக்!

 

‘கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு’ : கிளாஸ் மற்றும் மாஸாக இருக்கும் பிகில் செகண்ட் லுக்!

நடிகர் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.  ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ள இந்த படத்தில் 
நயன்தாரா,நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் விஜய்யின்  பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இப்படத்திற்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது.  ஃபர்ஸ்ட்  பஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது.  

 

இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு பிகில்  படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. அதில் விஜய் மைக்கேல் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும்  ஜெர்சி அணிந்தபடி நிற்கும் ஸ்டில், கால்பந்து ஆடும் படியான ஒரு போஸ், கையில் கத்தி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என மாஸாக  நிற்கும் மற்றொரு விஜய், கோட் ஷூட் அணிந்த படி கிளாஸாக நிற்கும் போஸ்  என  இரண்டாவது போஸ்டர் அதகளமாக உள்ளது. 

vijay

பிகில்  படத்தின் இந்த போஸ்டர்களை அவரது ரசிகர்கள்  படம் வெளியானது போல குதூகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.