‘கழுதையில் சென்ற பொங்கல் பரிசுகள்’ அளவில்லா ஆனந்தம் அடைந்த மலைவாழ் மக்கள் !

 

‘கழுதையில் சென்ற பொங்கல் பரிசுகள்’ அளவில்லா ஆனந்தம் அடைந்த மலைவாழ் மக்கள் !

வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 ஆதி உயரத்தில் உள்ளது. அங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 ஆதி உயரத்தில் உள்ளது. அங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு  எந்த அடிப்படை வசதியும் இல்லை. சாலை வசதி, மின்சார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்வி உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் அங்கு மக்கள் வசித்து வருகின்றனர். மழை பெய்யும் போது அதன் மூலம் உருவாகும் சாலையைத் தான் இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

tttn

குறிப்பாகப் பெண்களுக்குப் பிரசவ வலி வந்தாலோ அல்லது பிணங்களைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்றாலோ டோலி கட்டி தான் மலை அடிவாரத்திற்குக் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அந்த கிராம மக்களுக்குப் பொங்கல் பரிசு தர வேண்டும் என்று ஆட்சியர் முடிவு செய்துள்ளார். அந்த மலையின் மீது, கழுதைகள் மட்டுமே பொதி சுமந்து செல்லும் என்பதால் கழுதைகள் மூலம் பரிசுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார். 

ttn

அதன் படி, 12 கழுதைகள் மூலம், மலையடிவாரத்தில் இருந்து 4 கி.மீ தூரம் உள்ள அந்த கிராமத்திற்கு இன்று காலை பொங்கல் பரிசு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குப் பாதுகாப்பாக, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுச் சங்கத் தலைவர் திருப்பதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.