கழிவு நீரை ஏரியில் கலக்க முயற்சித்த மாநகராட்சி.. பொதுமக்கள் எதிர்ப்பால் பணிந்த ஊழியர்கள்..?!

கழிவு நீரை ஏரியில் கலக்க முயற்சித்த மாநகராட்சி.. பொதுமக்கள் எதிர்ப்பால் பணிந்த ஊழியர்கள்..?!

மக்களின் எதிர்ப்பால் மிரண்டு போன மாநகராட்சி, அப்பகுதியில் உள்ள கழிவு நீரையெல்லாம் இயந்திரம் மூலம் வெளியேற்றி வருகின்றனர். தங்களை சுற்றியுள்ள பகுதியை தூய்மையாக வைப்பதற்கும், ஏரியை காப்பாற்றுவதற்கும் மாநகட்சியை எதிர்த்து குரல் கொடுத்த மக்களின் செயல் வியக்கத்தக்கது.

சென்னையில் பெய்து வரும் கன மழையால் கொரட்டூர், அம்பத்தூர் மற்றும் பட்டரைவாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீருடன் கால்வாய் நீரும் கலந்து உள்ளே புகுந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அதை சுத்தம் செய்யுமாறு மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். 

Drainage water

கழிவு நீரை எங்கு வெளியேற்றுவது என்று திணறிய மாநகராட்சி ஊழியர்கள், கழிவு நீரை கொரட்டூர் ஏரியில் வெளியேற்றி விடலாம் என்று முடிவு செய்து, அதற்கான பணியை ஆரம்பித்தனர். கழிவு நீரை ஏரியில் வெளியேற்றினால் அப்பகுதியை சுற்றியுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டைக் கழிவுகளையும் ஏரியிலேயே வெளியேற்றுவார்கள் என எண்ணி, மாநகராட்சியின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிரிப்பு தெரிவித்தனர். 