கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த இளைஞரைக் காப்பற்ற சென்ற நபர்.. விஷவாயு தாக்கி இருவரும் பலி!

 

கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த இளைஞரைக் காப்பற்ற சென்ற நபர்.. விஷவாயு தாக்கி இருவரும் பலி!

சமீபத்தில்,  சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் கழுவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

மலக்குழியில் விழுவதில் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் தான் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இத்தகைய உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில்,  சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் கழுவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னையிலேயே மலக்குழியில் விழுந்து இன்னும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

tt n

சென்னை நொளம்பூர் அருகேயுள்ள ரெட்டி பாளையம் சாலையில் இருக்கும்  கழிவுநீர் வாரியத்தின் நீரேற்ற நிலையத்தில் ஒரு பெரிய கழிவுநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியை இரும்பு கம்பிகளைக் கொண்டு மூடுவதற்காகக் கண்ணன் (45) மற்றும் பிரகாஷ் (24) என்பவரும் நேற்று சென்றுள்ளனர். இவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பிரகாஷ் திடீரென தவறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதனைக் கண்ட கண்ணன், பிரகாஷை காப்பாற்றுவதற்காக அவரும்  கழிவுநீர் தொட்டிக்குள் குதித்துள்ளார். இதனால், அவர்கள் இரண்டு பேருமே விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 

tttn

தகவல் அறிந்து உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கண்ணன் மற்றும் பிரகாஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.