கழிவறையில் நின்று செல்பி எடுத்தால்தான் கல்யாணம்- மத்திய பிரதேசத்தில் கட்டாயம்

 

கழிவறையில் நின்று செல்பி எடுத்தால்தான் கல்யாணம்- மத்திய பிரதேசத்தில் கட்டாயம்

மத்திய பிரதேசத்தில் முதல்வர் திருமண திட்டத்தின்கீழ் மணமகளுக்கு அரசின் நிதியுதவி வேண்டுமானால் மணமகன் தனது வீட்டு கழிவறையில் செல்பி எடுத்து மனுவுடன் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் கல்யாண விவாஹா\நிக்ஹா திட்டத்தை மத்திய பிரதேச அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய மணமகளுக்காக  அரசு சார்பாக ரூ.51 ஆயிரம் கிடைக்கும். மேலும் ஏராளமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் மாநில அரசு திருமணத்தை நடத்தும். இந்த திட்டத்தின்கீழ் மணமகளுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க வேண்டுமானால் மணமகன் திருமணத்துக்கு முன் தனது வீட்டின் கழிவறையில் நின்று செல்பி எடுத்து அதனை மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும். செல்பியை போட்டாவை கொடுக்கவில்லை என்றால் நிதி கிடைக்காது.  ஒவ்வொரு வீட்டிலும் டாய்லெட் கட்டப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை அரசு மேற்கொண்டது.

மெகா கல்யாணம்

போபாவில் மத்திய லைப்ரரி மைதானத்தில் நேற்று 77 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்ற மணமகன்களில் ஒருவரான முஹம்மது யூசுப் கூறுகையில், நாம் கொடுத்த செல்பி போட்டாவை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் கட்டாயம் நம் வீட்டுக்கு வந்து டாய்லெட் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்வார்கள் என தெரிவித்தார். மணமகள்களில் ஒருவரான சோயியா இது குறித்து கூறுகையில், வீட்டில் கழிவறை உள்ளதா என்பதை  இந்த வழிமுறையில் உறுதி செய்து கொள்வதில் தவறும் இல்லை. நான் இதை நல்ல முடிவு என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

மணமகள்கள்

அரசின் திட்டம் நன்றாக இருந்தாலும், அரசு சொன்ன மாதிரி இந்த திட்டத்தில் திருமணம் செய்தவர்களுக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை என பலர் குற்றச்சாட்டி வருகின்றனர். கடந்த பிப்ரவரி வரை இந்த திட்டத்தின் கீழ் ஒழுங்காக பயனாளிகள் பயன் பெற்று வந்தனர். ஆனால் அதன் பிறகு சுமார் 700  ஜோடிகள் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ்  இன்னும் பணம் வரவில்லை என முக்தர் ஹசன் என்பவர் தெரிவித்தார்