கழற்றி விடப்படும் டி.டி.வி… சசிகலா தலைமைக்கு ஓ.பி.எஸ்- எடப்பாடி சம்மதம்… பச்சை கொடி காட்டிய பா.ஜ.க..!

 

கழற்றி விடப்படும் டி.டி.வி… சசிகலா தலைமைக்கு ஓ.பி.எஸ்- எடப்பாடி சம்மதம்… பச்சை கொடி காட்டிய பா.ஜ.க..!

சசிகலா இத்தனை நாள் சிறைதண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவர் மீது இயல்பாக சிறு பரிதாபம் கொண்டிருக்கும் பி.ஜே.பி., அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் யோசனைக்கும் வந்துவிட்டதாம்.

கழற்றி விடப்படும் டி.டி.வி… சசிகலா தலைமைக்கு ஓ.பி.எஸ்- எடப்பாடி சம்மதம்… பச்சை கொடி காட்டிய பா.ஜ.க..!

சசிகலாவின் அண்ணன் மகனும், அவரது சக சிறைவாசி இளவரசியின் மகனுமான விவேக் மீதான கோபம் புகைந்து, புகைந்து தினகரன் மனதில் வெடித்துச் சிதறியே விட்டது. இதன் விளைவாக ஜெயா டி.வி. குழுமத்தில் இனி தன்னை, தன் கட்சியை பற்றிய செய்திகளுக்கு இடமில்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டுவிட்டார் தினகரன். விளைவு தனக்கென புதிய சேனலை கையிலெடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். 

தினகரன் புதிய சேனல் துவங்க விண்ணப்பித்தால் டெல்லி அதற்கு அனுமதி தராது என்பதால் ஏற்கனவே நட்டத்திலோ அல்லது பணமின்றியோ இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு சேனலை கையிலெடுக்கும் முயற்சியில் அவரது ஆட்கள் இருக்கின்றனர். ஆக தனி சேனல் துவக்குவதன் மூலம் சசிகலாவுக்கும் தனக்கும் இடையில் பெரும் பிளவு ஏற்பட்டுவிட்டதென்பதை தினகரன் உலகுக்கு உணர்த்திவிடுகிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

சசிகலாவிடமிருந்து தினகரன் விலகுவதால், சசியிடம் நெருங்கிட ஆளும் அ.தி.மு.க. அணி ரெடியாகிவிட்டதாம். தங்கள் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு எந்த செல்வாக்கும் பெரிதாய் இல்லை என்பதை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருமே உணர்ந்துவிட்டனர். மேலும் எதிர்வரும் உள்ளாட்சி மற்று சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. நிச்சயம் மேலும் சரிவடையும் என்றே அத்தனை விதமான கருத்துக்கணிப்புகளும், அலசல்களும், அரசியல் பார்வையாளர்களின் கோணங்களும் கூறுகின்றன.

எனவே தாக்கள் இருவர் மட்டும் இணைந்து எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்று புரிந்து கொண்டிருக்கும் இரு ஒருங்கிணைப்பாளர்களும் ‘சசிகலாவுடன் இணைந்து கழகத்தை வலுவாக்குவோம்’ எனும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதை அவர்கள் மட்டும் முடிவு செய்தால் போதாதே, பி.ஜே.பி. தலைமையிடமும் ஓ.கே. வாங்க வேண்டுமே!

ஆமாம் அங்கேயும் இதைப் பற்றி தெளிவாக பேசி, எதார்த்தத்தை விளக்கி கூறியுள்ளனர். அப்போது ‘சசிகலாவைதான் அ.தி.மு.க. தொண்டர்கள் வெறுக்கிறார்களே’ என்று எதிர்கேள்வி எழ, ‘அம்மா இருக்கும்போது தான் சின்னம்மாவை தொண்டர்கள் வெறுத்தார்கள். ஆனால் இன்று ஜெயலலிதா இல்லாத நிலையில் சசிகலாவை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். ஸ்டாலினுக்கு எதிரான சரியான தலைமையாக சசிகலாவை தான் நினைக்கிறார்கள். அவர் வந்தால்தான் பிரிந்து கிடக்கும் கட்சி ஒன்றுபடும். நம்மால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தடம் பதிக்க முடியும். 

அதே வேளை எந்த சூழலிலும் தினகரனை உள்ளே அனுமதிக்க மாட்டோம்.’ என்று சொல்லியுள்ளனர். பி.ஜே.பி.யும் தினகரன் கூடவே கூடாது எனும் நிபந்தனையை மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்லிவிட்டு, இந்த இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதாம். சசிகலா இத்தனை நாள் சிறைதண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவர் மீது இயல்பாக சிறு பரிதாபம் கொண்டிருக்கும் பி.ஜே.பி., அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் யோசனைக்கும் வந்துவிட்டதாம். 

இதற்கெல்லாம் ஏற்றார்போல இப்போது கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்துவிட்டதையும் கவனிக்க வேண்டும். இந்த தகவல்களை அப்படியே சசிகலாவிடம் சொல்லியிருக்கின்றனர். தினகரன் மீது பலவித கடுப்பில் இருக்கும் அவரும் கிட்டத்தட்ட ஓ.கே. என்றுவிட்டாராம். ஆக தினகரனை சசிகலா கழட்டிவிடுவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.