கழட்டிவிட நினைக்கும் அதிமுக; பியூஷ் கோயல் இல்லை என்றால் தேமுதிக நிலைமை?!

 

கழட்டிவிட நினைக்கும் அதிமுக; பியூஷ் கோயல் இல்லை என்றால் தேமுதிக நிலைமை?!

பிரேமலதா விஜயகாந்த் -இன் பேச்சால் தேமுதிக உடன் கூட்டணி அமைக்கும் முடிவை கைவிட உள்ளது அதிமுக தரப்பு.

சென்னை: பிரேமலதா விஜயகாந்த் -இன் பேச்சால் தேமுதிக உடன் கூட்டணி அமைக்கும் முடிவை கைவிட உள்ளது அதிமுக தரப்பு.

தனித்து போட்டியிட பயமில்லை, 37 அதிமுக எம்பிக்களால் தமிழகத்துக்கு என்ன செய்ய முடிந்தது என பிரேமலதா பேசியது அதிமுக தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைப்பது என்ற குழப்பத்தில் உள்ள தேமுதிக, யாருடனும் கூட்டணி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

மோடி சென்னை வந்த சமயம் திமுக உடன் கூட்டணி குறித்து பேசியது, பிரேமலதா பத்திரிகையாளரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியது, அதிமுக எம்பிக்களை விமர்சனம் செய்தது என தேமுதிகவை அதிமுக கழட்டிவிட பல காரணங்கள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாமகவுக்கும் தேமுதிக உடன் கூட்டணி வைப்பதில் துளியும் விருப்பமில்லையாம்!.. ஆனாலும் தேமுதிகவை கழட்டிவிட முடியாமல் தவிக்க காரணம் பாஜக தலைவர் பியூஷ் கோயல். மக்கள் நலக் கூட்டணி பாசத்தால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வலியுறுத்துகிறது போல பாஜக, பியூஷ் கோயல் எப்படியாவது தேமுதிகவை கூட்டணியில் இணைத்துவிடுங்கள் என அதிமுக தரப்புக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்!.. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிமுக தரப்பும் கவலையில் உள்ளது.