கள்ள ஓட்டாகிப்போன மோகன் ஓட்டு! தேர்தல் சுவாரசிய துளிகள்!

 

கள்ள ஓட்டாகிப்போன மோகன் ஓட்டு! தேர்தல் சுவாரசிய துளிகள்!

நம்ம மைக் மோகன் ஓட்டுப் போடுவதற்காக கம்பீரமாக வந்தார். ஆனால், அவர் ஓட்டை வேறு யாரோ கள்ள ஓட்டாக பதிவு செய்துவிட்டு பத்திரமாக சென்றிருக்கிறார்கள். சர்க்கார் பாணியில், நீதிமன்றம் சென்று வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு, அடுத்துவரும் தேர்தலில் மோகனே தனி அணி துவங்கி தேர்தல் களம் காண்பார் என நம்புவோம்.

மினி சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு ஆளாகியிருக்கிறது நடிகர் சங்க தேர்தல். தமிழின் முக்கிய செய்தி சேனல்கள் சென்னையில் தங்களுடைய அனைத்து OB வேன்களையும், தேர்தல் நடக்கும் எப்பாஸ் பள்ளி வாசலில் நிறுத்தி நேரலையில் ஒளிபரப்பி வருகின்றன.

Nasser

“நாட்ல குடிக்க தண்ணி இல்ல, இந்த சினிமாகாரங்கதான் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை இவ்ளோ களேபரமா மாத்தி வச்சுருக்காங்கன்னா, இந்த மீடியாகாரங்களுக்கு எங்க போச்சு புத்தி”ன்னு நிறைய பேர் கேட்பதை கவனிக்க முடிகிறது. கேட்கட்டுமே? கேட்டுட்டு எங்கப் போவாங்க? நேரா நியுஸ் சேனல்தான் பாக்கப்போறாங்க.

Kushbhu

ரைட்டு. அது அப்படி ஆச்சா! வாக்களிக்க தகுதியான 3,171 பேரில், தபால் வாக்குகள் தவிர்த்து காலை 11:30 மணிவரை 845 ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன. முன்னணி நடிகர்களில் ரஜினிக்கு தபால் வாக்குச்சீட்டு தாமதமாக சென்றதால் அவர் வாக்களிக்கவே இல்லை. காலையிலேயே வந்து வாக்களித்த நடிகை குஷ்பு, 80% வரை வாக்குகள் விழும் என நம்புவதாக தெரிவித்தார்.

Vijay

அதன்பின், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் இதுவரை வாக்களித்துள்ளனர். ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு சென்றார். நம்ம மைக் மோகன் ஓட்டுப் போடுவதற்காக கம்பீரமாக வந்தார். ஆனால், அவர் ஓட்டை வேறு யாரோ கள்ள ஓட்டாக பதிவு செய்துவிட்டு பத்திரமாக சென்றிருக்கிறார்கள்.

Mohan

சர்க்கார் பாணியில், நீதிமன்றம் சென்று வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு, அடுத்துவரும் தேர்தலில் மோகனே தனி அணி துவங்கி தேர்தல் களம் காண்பார் என நம்புவோம்.