கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று பாஜக உதவ வேண்டும்: பிரியங்கா காந்தி

 

கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று பாஜக உதவ வேண்டும்: பிரியங்கா காந்தி

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்தது. இதற்கு பாஜக பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட்: பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்தது. இதற்கு பாஜக பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

”உத்தரப் பிரதேசம் மற்றம் உத்தரகாண்ட் மாநிலத்தில் 90-க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் கூடும் என தெரிகிறது. இரண்டு மாநிலங்களிலும் சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசுகளின் ஆதரவு இல்லாமல் இந்தத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என்பதை நம்ப இயலாது.

இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு பாஜக பொறுப்பேற்று உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்திருப்பதாகவும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.