கள்ளக்காதல்கள் பெருகுவது ஏன்? அதற்கு யார் பொறுப்பு?

 

கள்ளக்காதல்கள் பெருகுவது ஏன்? அதற்கு யார் பொறுப்பு?

கள்ளக்காதல் அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் அதிகரிப்பது ஏன் என்பது குறித்து உளவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி விளக்கமளித்துள்ளார்.

சென்னை: கள்ளக்காதல் அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் அதிகரிப்பது ஏன் என்பது குறித்து உளவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி விளக்கமளித்துள்ளார்.

இன்றைய சூழலில் கள்ளகாதலால் மனைவி கொலை, நண்பருடன் இணைந்து கணவனை கொன்ற மனைவி என்ற செய்திகள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டே இருக்கின்றன. இது போன்று அதிகரித்து வரும் கள்ளக்காதல் விவகாரத்திற்கு யார் காரணம் என்பதை மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேள்வியாக முன்வைத்தோம்.

அவர் கூறியதாவது;- ‘ஈர்ப்பு என்பது இயல்பானது. அது திருமணத்திற்கு முன்னாடியும் வரும், திருமணத்திற்கு பிறகும் வரும். திருமணம் என்பது ஒரு செயற்கையான ஒரு பந்தம். சட்டரீதியான ஒரு இணைப்பு. நானும் நீயும் சேர்ந்து குழந்தை பெத்துக்கலாம். இந்த குழந்தையெல்லாம் உனக்கு தான் பொறந்தது அப்படிங்குறதுக்கான ஒப்பந்தம் தான் திருமணம். இப்போது என் சகோதரனை என்னால் விவாகரத்து செய்ய முடியாது, என் அம்மாவை என்னால் விவாகரத்து செய்யமுடியாது. ஆனால் எனக்கும் என்  துணைவனுக்கும் இடையே பிரச்னைகள் ஒரு மோசமான சூழ்நிலைக்கு போயிடுச்சி அப்படினாலே அவரை விட்டு பிரிந்து வருவதற்குச் சட்டத்தில் இப்போது இடம் இருக்கு. 

divorce

முக்கியமாக சனாதான தர்மத்தை தான் நாம் இந்து மதம் அப்படினு சொல்றோம். ஆனால் சனாதான தர்மமும் இந்து மதமும் ஒன்று இல்லை. இந்து அப்படிங்குற பேரு புதுசா வந்த பேரு. அதாவது வெளியூர் ஆட்கள் அந்த நதி ஓடுதே அந்த நாடு  பேரு என்னென்னு கேட்கும் போது, சிந்து நதி ஓடுது அது சிந்து நாடு, சிந்துன்னு வராதவங்க, இந்து அப்படின்னு சொன்னாங்க. அது இண்டிகா, இந்துஸ்தான், இந்து அப்படினு நதியையொட்டி வைச்ச பேரு தான் இந்து. அந்த நதி இப்போ எங்க ஓடுதுன்னா பாகிஸ்தான்ல ஓடுது. அப்போ அந்த மக்களை தாண்டி மீதமுள்ள மக்களுக்கு நாம வேற பெரு வச்சிருக்கணும். ஆனால் அதில் நிறைய வரலாற்று தவறுகள் இருப்பதனால் திரும்ப திரும்ப நாம இந்து என்று சொல்ல வேண்டி இருக்கு. சனாதான தர்மத்துல பெண்களுக்குச் சொத்து உரிமை கிடையாது. இந்து மதத்துல தான் பெண்களுக்கு சொத்து உரிமை இருக்கு. சொத்து உரிமைக்கு பிறகு தான் திருமணம் ஆன பெண் கணவன் கிட்ட அடிஉதை வாங்க தேவையில்லை. வரதட்சணை கொடுக்க தேவையில்லை பெண்களுக்கு தெரியவந்தது. 

illegal

 

ஒருவேளை கணவன் மனைவிக்கு இடையே விவாகரத்து வாங்கிட்டாலோ, இல்லை இயற்கையாகவோ, செயற்கையாகவோ ஆணும் பெண்ணும் பிரிஞ்சிட்டாலோ அவங்களுக்கு இயற்கையாகவே இன்னொரு துணை தேவைப்படுது. சில சமயங்களில் அவர்கள் இணைப்பிற்குள் தான் இருப்பார்கள். ஆனால் அங்க இணைப்பு இருக்காது. ஒரு பற்று, பாசம், கூடல் அப்படின்னு ஒண்ணு இருக்காது.அந்த சமயத்தில் வெளியில் இருந்து அவங்களுக்கு ஒரு சிக்னல் கிடைக்கும் போது, சரி இந்த உறவில் இருந்து விடுபட்டு அங்கு சென்று விடலாம் என்று விவாகரத்திற்கு முன்னாடி ஒருத்தி தடுமாற்றத்தில் இருக்குறாங்க. ஆனால்  இந்த உறவை அப்படியே ரகசியமாக வைத்து கொள்ளவேண்டும் என்று யாருமே நினைக்கிறது இல்ல. முந்தைய உறவை விட்டுட்டு புதிய உறவுக்குள் சட்டரீதியான ஒரு அங்கீகாரத்திற்குள் இருக்கவேண்டும் என்று தான் அவங்க விரும்புறாங்க. இது எல்லாருமே சீக்கிரம் நடக்குமா என்று சொல்லமுடியாது, இது குறித்த ஒரு வெளிப்படையான பேச்சு வார்த்தை இல்லாததினால் சட்டென்று அசிங்கப்படுத்திடுறாங்க. கேவலப்படுத்திடுறாங்க. 

அப்படி கேவலப்படுத்தும் போது கூட, ஆணை கேவலப்படுத்துகிறார்களா? பெண்ணை கேவலப்படுத்துகிறார்களா? என்று பார்த்தால் பெண்ணை தான் கேவலப்படுத்துகிறார்கள். நீ பொம்பள நீ அடங்கி இருக்க வேண்டாமா? உனக்கு தெரிஞ்சி இருக்க வேண்டாமா?கண்டிப்பாக ஒரு பெண் படிதாண்டும் போது அந்த குடும்பத்தில் கூடுதலான பிரச்னைகள் இருக்கும் என்பது உண்மை தான். பெண்ணை அந்த இடத்திற்கு தள்ளக்கூடாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி தள்ளியவர்களை நீங்கள் என்ன சொன்னீங்க. அந்த பெண் மனசு உடைஞ்சி எனக்கு இவன் வேண்டாம். இவனை விட்டுட்டு நான் அவன் கூட போறேன்னு சொல்லுறான்னா, காரணம் இல்லாமல் ஒரு பெண் அப்படி சொல்வாளா? சொல்லமாட்டாள். அந்த காரணத்தை ஏற்படுத்தின ஆளுக்கு நீங்க என்ன விமர்சனம் வைச்சீங்க, என்ன மாற்றத்தை கொண்டு வந்தீங்கன்னா ஒண்ணுமே கொண்டுவரவில்லை. எப்படி இருந்தாலும் பரவாயில்லை, ஒரு பெண் பொறுத்துக்கொண்டு அடங்கி ஒடுங்கி இருக்கணும்ன்னா, இதில் ஒரு லாஜிக்கே இல்லையே. 

slap

உங்க வீட்ல வளர்க்குற ஒரு நாயை கூட உங்களால அப்படி கண்ட்ரோல் பண்ணமுடியாது. அப்படி இருக்கும் போது, ஒரு மனுஷப்பெண்ணை மட்டும் கண்ட்ரோல் பண்ணீங்கன்னா?, அவள் நாயை விட மேலானவள் இல்லையா? அவளுக்கு உணர்வுகள் இருக்கிறது இல்லையா? அதை எப்படி போக்குறது அதற்கு நியாயமான தீர்வு என்ன அப்படின்னு தான் நாம பார்க்கணுமே தவிர, என்ன நடந்தாலும், நீ பொறுத்துகிட்டு போம்மா அப்படிங்குறது தான் இன்றைக்கு வரைக்கும் இருக்குற நிலைப்பாடாக இருக்கு. இது யாருக்கு சாதகமான நிலைப்பாடுன்னு பார்த்தா கண்டிப்பாக இது ஆணுக்கு சாதகமான நிலைப்பாடு. எந்த மாதிரியான ஆணுக்கு சாதகமான நிலைப்பாடு என்று பார்த்தால், கண்டிப்பாக ஆண்மை குறைவாய் இருக்குற  ஆணுக்கு இருக்குற நிலைப்பாடு. 

 

ஆண்மை அதிகமாக இருக்குற ஆண்கள் என்ன செய்வாங்க? என் பொண்டாட்டி எதுக்கு கஷ்டப்படணும். எவனோ ஒருத்தன் சொல்லிட்டானா, என் பொண்டாட்டிய நான் கேள்வி கேட்டுருவேனா. எவன்டா என் பொண்டாட்டிய சொன்னவன் அப்படின்னு கேக்கணும், அவன் கேட்குற தோரணையிலேயே யாரும் அவன் பொண்டாட்டிய பத்தி பேச மத்தவங்க பயப்படணும். அதை விட்டுட்டு, இல்லம்மா அவன் சொல்லிட்டாம்மா நீங்க செத்துடுமா, இல்ல ஒரு அக்னி பரீட்சை செஞ்சி காட்டிடும்மான்னு சொல்லுறது, ஆம்பளைக்கு உண்டான பேச்சா? இல்லை ஆண்மையற்றவனுக்கு உண்டான பேச்சா?அப்படின்னு யோசிச்சு பாருங்களேன். ஒரு நிஜமான ஆண், மனைவி,  குழந்தைகளுக்காக அவர்களை  எதிர்த்து நிற்பான். இந்த சூழலில் ஒரு பெண்ணை பாதுகாப்பது ஆண்களுடைய வேலை தானே. அதை விட்டுட்டு நானும் சேர்ந்து ஒரு தர்மஅடி போடுறேன். அவளை அசிங்கப்படுத்துறேன், கேவலப்படுத்துறேன், நான் அசிங்கப்படுத்துறதுல அவள் இனிமே பேசவே கூடாதுன்னு சொல்றவங்க யாருமே நிஜமான ஆண்கள் கிடையாது’ என்றார்.