களையிழந்த தமிழ் புத்தாண்டு: சோஷியல் மீடியாவில் பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!

 

களையிழந்த தமிழ் புத்தாண்டு: சோஷியல் மீடியாவில் பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!

குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்றும் வணங்குவது வழக்கம். மேலும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் வாழ்த்துகளை பரிமாறி கொள்வர்

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த நாளில் மக்கள் வீடுகளில் பலகாரங்கள் செய்தும், குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்றும் வணங்குவது வழக்கம். மேலும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் வாழ்த்துகளை பரிமாறி கொள்வர். 

ttn

இப்படி தான் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை அப்படியில்லை. கொரோனாவால் உலகம் முழுவதும் மக்கள் செத்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவும், தமிழ்நாடும்  விதிவிலக்கல்ல. இங்கும் மக்கள் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  வருகின்றனர். 
தமிழ் புத்தாண்டு நேரத்தில் மக்கள் பொதுவாக மார்க்கெட்டுகளில் குவிந்து கிடப்பார்கள். ஆனால் ஊரடங்கால் கடைகள் வெறிசோடி காணப்படுகிறது.  இதனால் மக்கள் மட்டுமல்ல வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ttn

இதனால்  இந்தாண்டு தமிழ் புத்தாண்டு களையிழந்து காணப்படுகிறது. ஆனாலும் இதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் வீடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருந்து குடும்பத்துடன் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடவேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. 

tn

உடலால் தனித்திருந்தாலும்  உள்ளதால் ஒன்றிணைந்து வாட்ஸ் அப், பேஸ்புக் என புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்பி இம்முறை புத்தாண்டை  மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள்.