களைக்கட்டும் பிகில் படத்தின் வியாபாரம்: மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

 

களைக்கட்டும் பிகில் படத்தின் வியாபாரம்: மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

பெண்கள் கால்பந்து விளையாட்டு மையமாகக் கொண்ட உருவாகிவரும் இதில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சென்னை: ‘பிகில்’ திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் பிகில். மேலும் இதில் நயன்தாரா, ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

பெண்கள் கால்பந்து விளையாட்டு மையமாகக் கொண்ட உருவாகிவரும் இதில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளிநாடு திரையரங்க மற்றும் விநியோக உரிமையை யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளனர்.  இந்தத் தகவலை தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகப் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார் .