களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்!

 

களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்!

தீபாவளி திருநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் தல தீபாவளி கொண்டாடுவது வழக்கம்.

சென்னை: தீபாவளி திருநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் தல தீபாவளி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இம்முறை தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க!

நடிகை நமீதா- வீரேந்திர செளத்திரி

namitha

 
தமிழில் எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. நடிகர்கள் விஜய்,அஜித், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தார். இதையடுத்து  டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நடிகர்  வீரேந்திர செளத்திரியை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

நடிகை பாவனா- நவீன் 

bhavana

நடிகை பாவனா  திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இவர் சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல், ஜெயங்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னட தயாரிப்பாளர் நவீனை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி – லட்சயா 

aadhi

ஹிப்பாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி  இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்  நடிகராக வந்துள்ளார். இவருக்கும்  லட்சயா என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. 

நடிகர் ஆதவ் கண்ணதாசன்- வினோதினி

aadhav

கவிஞர் கண்ணதாசனின் பேரனும்  நடிகருமான ஆதவ் கண்ணதாசன்- வினோதினி என்பவரைக் கடந்த டிசம்பர் மாதம்  திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் டேனியல்- டெனிஷா 

daniel

நகைச்சுவை நடிகரும், பிக் பாஸ் போட்டியாளருமான டேனியல் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய அன்றே தனது காதலி டெனிஷாவை  பதிவு திருமணம் செய்துகொண்டார்.