களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் !

 

களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அந்த இரண்டுபேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் காவலர் வில்சனை கொலை செய்ததற்கு முக்கிய ஆதாரமான கத்தி மற்றும் துப்பாக்கி குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கேரளாவில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த துப்பாக்கி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பேருந்து நிலையத்தின் அருகே அதனை வீசிய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

ttn

குற்றவாளிகளின் காவல் தண்டனை நேற்றோடு நிறைவடைந்த நிலையில், அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 20 பேர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. அதில் 7 பேருக்கு இந்த கொலையில் நேரடி தொடர்பு இருப்பதாகவும் மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக போலீசார் விசாரித்து வந்த எஸ்.ஐ வில்சனின் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.