களத்தில் பிரஷாந்த் கிஷோர்… கலக்கத்தில் தி.மு.க ஐ.டி விங்!

களத்தில் பிரஷாந்த் கிஷோர்… கலக்கத்தில் தி.மு.க ஐ.டி விங்!

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் தி.மு.க ஒப்பந்தம் செய்துகொண்டது. எந்த ஒரு தலைவரும் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், மு.க.ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோரை வரவேற்றுப் பதிவிட்டு எதிர் தரப்பு கட்சிகளின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக்கொண்டார்.

தங்களிடம் எதுவும் கேட்காமல் பிரஷாந்த் கிஷோர் நிறுவனம் களத்தில் இறங்கி ஆய்வுகள் தொடங்கியிருப்பது தி.மு.க ஐ.டி விங்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் தி.மு.க ஒப்பந்தம் செய்துகொண்டது. எந்த ஒரு தலைவரும் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், மு.க.ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோரை வரவேற்றுப் பதிவிட்டு எதிர் தரப்பு கட்சிகளின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக்கொண்டார்.

mk

பிரஷாந்த் கிஷோர் ஆன்லைனில் வேலை செய்பவர், கள நிலவரம் அவருக்குத் தெரியாது, சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு தி.மு.க-வுக்கு வாக்குகளை வாங்கிவிடுவார் என்று கதைவிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தன்னுடைய வேலையில் அவர் இறங்கிவிட்டார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து கள நிலவரத்தை அலசி ஆராயும் வேலையைத் தொடங்கியுள்ளார். தி.மு.க ஐ.டி-விங்கை அப்படி எடுத்துக் கொண்டு வேலை செய்யப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிரஷாந்த் கிஷோரின் கள ஆய்வு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பிரஷாந்த் கிஷோர் யாருக்கும் பிடிகொடுக்காமல் தன்னுடைய வேலை செய்வது தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தி.மு.க ஐ.டி-விங்கில் உள்ளவர்கள் பிரஷாந்த் கிஷோர் தங்களிடம் பேசுவார், தங்கள் கருத்தைக் கேட்பார், அவருடன் இணைந்து பணியாற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒப்பந்தம் செய்து இத்தனை நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தி.மு.க ஐ.டி-விங்கை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஐ.டி விங் நிர்வாகிகள் பிரஷாந்த் கிஷோர் மீது கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. 
ஆனால் இதைப் பற்றி பிரஷாந்த் கிஷோர் அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் பிரஷாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே, பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளைத் தொடங்கிவிட்டார். எந்த ஒரு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மோடிக்கு வாய்ப்பளித்துவிடக் கூடாது என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கிஷோர். உங்கள் வேலையை நீங்கள் வழக்கம் போல பாருங்கள், உதவி தேவைப்படும்போது சொல்கிறேன், அப்போது இணைந்து செயல்படலாம் என்று மேலிடத்தில் கூறியிருக்கிறாராம் பிரஷாந்த் கிஷோர்.