கல்வி திட்டங்களுக்கு ரூ 1 லட்சம் கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடி அறிவிப்பு

 

கல்வி திட்டங்களுக்கு ரூ 1 லட்சம் கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடி அறிவிப்பு

2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ 1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

டெல்லி: 2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ 1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

டெல்லியில் கல்வித்துறை சார்பில் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மோடி பேசுகையில், எனது தலைமையிலான அரசு கல்வித்துறையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரைஸ் எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் 2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு  ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்வித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்.  பழங்கால இந்தியாவில் அமைந்திருந்த  நாலந்தா, தட்சசீலம், விக்கிரமசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள், கற்பதற்கும் புதுமை படைப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளித்தது.

பள்ளிக்குழந்தைகள் மத்தியில் புதுமை படைக்கும் போக்கை ஊக்குவிப்பதற்காகவே, அடல் டிங்கரிங் லேப் ஆய்வகத் திட்டம் தொடங்கப்பட்டது. ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள், பாடத்திட்டம், ஆசிரியர் நியமனம், விரிவாக்கம் உள்ளிட்டவற்றை தாங்களே தீர்மானிக்கும் வகையில் மத்திய அரசு தன்னாட்சி வழங்கி உள்ளது. இந்தியாவில் உயர் கல்வித் துறை முன்னெப்போதும் கண்டிராத பாதை இது என்றார்.
.