கல்வி ஞானம், கேள்வி ஞானம் கொண்ட நட்சத்திரம் – திருவோண நட்சத்திரம் பொதுப் பலன்கள்

 

கல்வி ஞானம், கேள்வி ஞானம் கொண்ட நட்சத்திரம் – திருவோண நட்சத்திரம் பொதுப் பலன்கள்

சந்திரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் திருவோணம்.

சந்திரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் திருவோணம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரிடமும் இரக்கம் காட்டுவார்கள். மனிதாபிமானம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கோபமும், குணமும் ஒரே சேர இருப்பவர்கள் என்பதால் மற்றவர்கள் மீது கோபப்பட்டாலும், உடனடியாக மறந்து மன்னித்து விடுவார்கள். எச்சரிக்கை உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள். கல்வி ஞானமும் கேள்வி ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்கள். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு கணக்கு பார்க்க மாட்டார்கள்.

ttn

திருவோண நட்சத்திரக்காரர்கள் எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். லட்சியத்தை அடைவதில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் குறிக்கோளை அடையாமல் விட மாட்டார்கள். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இலக்கியங்களில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்களாக, கதை, கவிதை எழுதுவதில் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள். உலகில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வாழ்க்கைத்துணையை நேசிப்பவர்களாகவும், குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறக் கூடியவர்களாக இருப்பார்கள்.