கல்வியையும் கொல்லும் கொரானா-பாடத்தை முடிக்க முடியாமல் திணறும் புனே கல்லூரிகள்.. 

கல்வியையும் கொல்லும் கொரானா-பாடத்தை முடிக்க முடியாமல் திணறும் புனே கல்லூரிகள்.. 

கொரானா வைரஸ் தொற்றால் விடப்படும் தொடர் விடுமுறையால் புனே கல்லூரிகள் பாடத்தை முடிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதனால் ஹாஸ்டலர்கள் வீட்டிற்குச் செல்ல ஊக்குவிக்கப்பட்டுள்ளனர், மீறி ஹாஸ்ட்டலில்  தங்க விரும்புபவர்கள் ஹாஸ்டலுக்குள்ளேயே   இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரானாவால் பதினைந்து நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் இப்போது வகுப்பறையில்  கற்பித்தல் மற்றும் பேனா-காகித தேர்வுகளுக்கு மாற்று வழிமுறைகளை தேடுகின்றன. 

pune college

விஸ்வகர்மா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் வாசுதேவ் காட், அனைத்து துறைத் தலைவர்களுடனும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு விரைவில் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வு வரும் என்று கூறினார். “எங்களிடம் ஏற்கனவே சில உள் அமைப்புகள் உள்ளன, விரைவில் நாங்கள் ஒரு அறிவிப்பை வெளியிடுவோம். ”என்றார்.

சிம்பியோசிஸ் சொசைட்டியின் முதன்மை இயக்குனர் வித்யா யரவ்தேகர், “மாணவர்களின்  பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவாதிக்க திங்களன்று, நாங்கள் அனைத்து டீன்களின் கூட்டத்தையும் கூட்டுகிறோம் . “என்றார் 
SPPU இன் நிர்வாகம் மாணவர்கள்  விடுதிகளில் இருக்க  விரும்பினால் விடுதிக்குள்ளேயே  இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் வீட்டிற்குச் செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம், ”என்று நிர்வாக இயக்குனர் சந்தீப் கெய்க்வாட் கூறினார்.