கல்வியும்தான் இலவசம் அதனால் படிக்காமல் இருக்க முடியுமா? முதல்வர் கேள்வி

 

கல்வியும்தான் இலவசம் அதனால் படிக்காமல் இருக்க முடியுமா? முதல்வர் கேள்வி

கல்வியும்தான் இலவசமாக கொடுக்கப்படுகிறது அதற்காக படிக்காமல் இருக்க முடியுமா என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: கல்வியும்தான் இலவசமாக கொடுக்கப்படுகிறது அதற்காக படிக்காமல் இருக்க முடியுமா என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கொந்தளிப்படைந்த அதிமுகவினர் சர்காருக்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனையடுத்து சர்கார் மறு தணிக்கை செய்யப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தலைவனின் திட்டங்களை விமர்சனம் செய்தால் தொண்டர்களுக்கு கோபம்தான் வரும். இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் தான் தருகிறோம். அதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.