கல்வியாண்டு தொடங்குவது எப்போது? – நிபுணர் குழுவை அமைத்த யுஜிசி

கல்வியாண்டு தொடங்குவது எப்போது? – நிபுணர் குழுவை அமைத்த யுஜிசி

கல்லூரி, பல்கலைக் கழகங்களின் கல்வியாண்டு முடிந்தும் தேர்வுகள் நடத்த முடியாமல் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டைத் தொடங்குவது எப்போது என்று ஆலோசனை வழங்க நிபுணர் குழுவை பல்கலைக் கழக மானியக் குழு அமைத்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் யுஜிசி எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழுவால் வழிநடத்தப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், ஆண்டுத் தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தவித்து வருகின்றன. 

ugc

மே மாதம் நெருங்குகிறது, தேர்வு முடித்து ரிசல்ட் வெளியிட வேண்டும், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கை உள்ளிட்ட பணிகளைத் தொடங்க வேண்டும். ஆனால், நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு எப்போது நடக்கும் என்றே தெரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் திணறி வருகின்றனர். ஊரடங்கு மே 3ம் தேதி முடிந்தாலும் அதை நீட்டிப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழு ஒன்றை யுஜிசி அமைத்திருந்தது. வரும் கல்வியாண்டை ஜூன் – ஜூலையில் தொடங்குவதற்கு பதிலாக செப்டம்பரில் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆலோசனைக் குழுவும் செப்டம்பரில் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் திறப்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே செப்டம்பர் மாதவாக்கில் பல்கலைக் கழகம், கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.