கல்வியறிவு பெற்றவர்களும் கற்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்- சத்யா நாதெள்ளாவை விமர்சனம் செய்த பா.ஜ.க.

 

கல்வியறிவு பெற்றவர்களும் கற்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்- சத்யா நாதெள்ளாவை விமர்சனம் செய்த பா.ஜ.க.

கல்வியறிவு பெற்றவர்களும் கற்க வேண்டும் என்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா சிறந்த உதாரணம் என பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி விமர்சனம் செய்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஹைதராபாத்தை சேர்ந்த சத்யா நாதெள்ளா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஏதுவாக இருந்தாலும் குடியுரிமை திருத்த சட்டம் மோசமானது. வங்கதேச அகதி இந்தியாவில் குடியேறி இந்தியாவின் அடுத்த யூனிகார்ன் உருவாக்குவதை மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியாக இருப்பதை பார்க்க ஆசைப்படுகிறேன். அமெரிக்காவில் எனக்கு என்ன நடந்ததோ, அதுதான் இந்தியாவிலும் நடக்கும் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

மீனாட்சி லேகி

குடியுரிமை திருத்த சட்டத்தை நாதெள்ளா விமர்சனம் செய்தது பா.ஜ.க. கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி டிவிட்டரில் நாதெள்ளாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மீனாட்சி லேகி டிவிட்டரில், நாதெள்ளாவின் அறிக்கையை போஸ்ட் செய்து, கல்வியறிவு பெற்றவர்களுக்கு கூட மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். குடியுரிமை திருத்த சட்டத்தின் முக்கிய காரணம், வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாகும். அமெரிக்காவில் யேசிடிகளுக்கு பதிலாக சிரிய முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்குவது எப்படி? என பதிவு செய்து இருந்தார். 

யசேடி மக்கள்

யேசிடி மக்கள் துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் ஒரு மதத்தை வழிபடுவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் இவர்களை குறிவைத்து அழிக்க தொடங்கினர். பல ஆயிரக்கணக்கான யேசிடிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் இனப்படுகொலை நடவடிக்கையால் யேசிடி மக்கள்தொகையில் 15 சதவீதத்தினர் வேறு நாடுகளுக்கு சென்றனர்