கல்லூரி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை! பாஜக தலைவருக்கு எதிராக 43 வீடியோ ஆதாரங்கள்! அதிர்ச்சியில் டெல்லி வட்டாரம்!

 

கல்லூரி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை! பாஜக தலைவருக்கு எதிராக 43 வீடியோ ஆதாரங்கள்! அதிர்ச்சியில் டெல்லி வட்டாரம்!

பாஜக தலைவர்களும், தொண்டர்களும் அதிகளவில் செக்ஸ் புகார்களில் சிக்கி வருவதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதிலும் இவர்களின் பங்கு அதிகளவில் இருப்பதாகவும் நாடு முழுவதும் சமீபமாய் ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமிதி பல்கலையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார்.

பாஜக தலைவர்களும், தொண்டர்களும் அதிகளவில் செக்ஸ் புகார்களில் சிக்கி வருவதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதிலும் இவர்களின் பங்கு அதிகளவில் இருப்பதாகவும் நாடு முழுவதும் சமீபமாய் ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமிதி பல்கலையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி, விசாரணை நடந்து வருகிறது.

chinmaya

புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரம், குற்றம் சாட்டப்பட்ட சின்மயானந்தாவிடம் 7 மணிநேரம் என தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் புகார் அளித்த பெண்ணின் தந்தை சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவினரிடம் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்களை ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘என் மகள் ஒரு வருடமாக சின்மயானந்தாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் மறைமுக கேமரா வைத்து சின்மயானந்தாவின் செயல்பாடுகளை பதிவு செய்யும்படி ஆகிவிட்டது’ என கூறினார். இது தொடர்பாக புகார் அளித்த மாணவியின் தோழி கூறுகையில், ‘அவள் என்னுடன் தான் படிக்கிறாள். என்னிடம் சின்மயானந்தாவின் பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவளுக்கு இலவச உணவு, சில சலுகைகள் விடுதியில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான காரணம் தாமதமாகத் தான் அவளுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் தான் அவள் குளித்த வீடியோவினை வைத்து மிரட்டுவதாக கூறினாள்’ என கூறியுள்ளார். 

harrassment

சர்ச்சையில் தொண்டர்களும், பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து சிக்கி வருவது டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், இது குறித்து இதுவரையில் கட்சியில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!