கல்லூரி மாணவிகளின் உற்சாக நவராத்திரி கொண்டாட்டம்!

 

கல்லூரி மாணவிகளின் உற்சாக நவராத்திரி கொண்டாட்டம்!

‘யாதுமாகி நின்றாய் காளி…  எங்கும் நீ நிறைந்தாய்’ என்று பாடிய மகாகவி பாரதி தன் இறுதி மூச்சு வரையில் சொல்லடி சிவசக்தி என்று சக்தி உபாசராகவே இருந்தார். பாரதியார் முதல் ராமகிருஷ்ணர், ஆதிசங்கரர் உட்பட் பெரிய பெரிய மகான்கள் பலரும் சக்தி உபாசகர்களாக இருந்தனர். இந்து மரபில் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் சக்தி வழிபாடு தவறாமல் இடம்பெற்று வந்துள்ளது.

‘யாதுமாகி நின்றாய் காளி…  எங்கும் நீ நிறைந்தாய்’ என்று பாடிய மகாகவி பாரதி தன் இறுதி மூச்சு வரையில் சொல்லடி சிவசக்தி என்று சக்தி உபாசராகவே இருந்தார். பாரதியார் முதல் ராமகிருஷ்ணர், ஆதிசங்கரர் உட்பட் பெரிய பெரிய மகான்கள் பலரும் சக்தி உபாசகர்களாக இருந்தனர். இந்து மரபில் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் சக்தி வழிபாடு தவறாமல் இடம்பெற்று வந்துள்ளது. அதனால் தான் அம்பாளுக்கு என்று தனியாக ஒரு மாதத்தையே ஆடி மாதமாக கொண்டாடி வருகிறோம்.  தன்னில் சரி பாதியை சக்திக்கு வழங்கி சிவபெருமாள் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரை வழிபடும் திருவிழா தான் நவராத்திரியாக பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

golu

மகாளய அமாவாசை நாளான இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.  துர்கா பூஜை அக்டோபர் 3ம் தேதியும், சரஸ்வதி பூஜை 7ம் தேதியும், விஜயதசமி 8ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாட்களும் வட மாநிலங்களில் பெரிய திருவிழாவாக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த பத்து நாட்களும் காளியை வெவ்வேறு ரூபத்தில் வழிபட்டு வந்தால், இழந்த பொருட்களையும், சக்திகளையும் பெறுவார்கள் என்பது ஐதீகம். நினைத்தது நிறைவேறும். மனதிலும், குடும்பத்திலும் உற்சாகம் பிறக்கும். வடமாநிலங்களில் மட்டுமல்லாது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று கோலாகலமாக கொண்டாடுவார்கள். மைசூர் தசரா கொண்டாட்டத்தைக் காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்தும் இந்த பத்து நாட்களில் மக்கள் குவிவார்கள். 

kolu

அடுத்த தலைமுறைக்கும் நவராத்திரியின் அருமையையும், பெருமையையும் சொல்லித் தரும் விதமாக சென்னையில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளில் நவராத்திரி விழாவை கொண்டாடினார்கள். டாண்டியா, கார்பா போன்ற வகையான நடனங்களை ஆடியும் சிறப்பு பூஜைகள் செய்தும் மாணவர்கள் கொண்டாடினார்கள். சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் கொலு வைக்கப்பட்டு, மாணவிகளின் நடனம், பாடல்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தது. மாணவிகள் சக்தி வேடமிட்டு நடனம் ஆடி அசத்தினார்கள்,