கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவு!

 

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவு!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. நாடு முழுவதும் மே. 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேற்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. ஊரடங்கிற்கு பின் நடத்தப்படுமா என்பதும் மாணவர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. மேலும் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

UGC

இந்நிலையில், கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்று யூஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பமடையாமல் தேர்வுக்கு தயாராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.