கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பழகன் பதில்

 

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பழகன் பதில்

ஆனால் கல்லூரிகளில் இன்னும் செமெஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 

கொரோனாவால் கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நடக்காமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் அடுத்த மாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரிகளில் இன்னும் செமெஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 

ttn

இந்நிலையில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பேசிய அமைச்சர் அன்பழகன், கொரோனா இல்லாத சூழல் ஏற்பட்டால் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா பற்றி மாணவர்கள் பயம் இல்லை என்ற சூழல் வந்த பிறகே கல்லூரியை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது என்றும் கூறினார். தொடர்ந்து, தற்போது கொரோனாவால் தனிமை படுத்தப்பட்டவர்கள் எல்லாரும் கல்லூரிகளிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளதால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மை பணி முடிந்ததும் தான் மீண்டும் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.