கல்லூரிகளில் பெருகும் பாலியல் பிரச்சினைகள் -பெண் விரிவுரையாளர்கள் அதிகம் தேவை.. 

 

கல்லூரிகளில் பெருகும் பாலியல் பிரச்சினைகள் -பெண் விரிவுரையாளர்கள் அதிகம் தேவை.. 

நைஜீரியாவின்  யுடியூஸில் வரலாற்றுத் துறையின் ஒரே பெண் விரிவுரையாளராக இருக்கும் பாவா, கல்லூரிகளில் அதிகமான பெண் விரிவுரையாளர்ளை நியமித்தால் அங்கு பாலியல் வன்கொடுமைகள் குறையும் என்று கூறினார்.

கல்லூரிகளில் பெண் விரிவுரையாளர்களை விட ஆண் விரிவுரையாளர்கள் அதிகமாக இருப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு வழி வகுக்குமென ஒரு நைஜீரிய பேராசிரியர் கூறினார் 

நைஜீரியாவின்  யுடியூஸில் வரலாற்றுத் துறையின் ஒரே பெண் விரிவுரையாளராக இருக்கும் பாவா, கல்லூரிகளில் அதிகமான பெண் விரிவுரையாளர்ளை நியமித்தால் அங்கு பாலியல் வன்கொடுமைகள் குறையும் என்று கூறினார். மேலும் மதிப்பெண் கொடுப்பதற்காக சில ஆண் பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாகவும், இதனால் பல மாணவிகள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் அவர் கூறினார். இதனால் பல்கலைக்கழகங்கள் நிறைய பெண் பேராசிரியர்களை நியமனம் செய்ய அவர் கேட்டுக்கொணடார். மேலும் ஆண் பேராசிரியர்களை விட பெண் பேராசிரியர்களிடம்தான் மாணவிகள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறமுடியும். அவர்களும் அதை நிவர்த்தி செய்வார்கள் என்றார். ஆண்களால்  மதிப்பெண்ணுக்காக  பெண்கள்  வன்கொடுமைக்கு ஆளாவதும் தடுக்க முடியும். அதனால் கல்லூரி வளாகத்தில் பாலியல் பிரச்சனைகளை தீர்க்க பெண் விரிவுரையாளர்கள் தேவை அதிகரித்துள்ளது என்றார்.