கல்கண்டு சாதம்

 

கல்கண்டு சாதம்

ஆடி 18 ம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடும் நாள். விதவிதமான கலந்து வைத்த சாதங்கள் தயாரித்து கொண்டாடுவது வழக்கம். வழக்கமாக` செய்யும் சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த கல்கண்டு சாதம் வித்தியாசமான ஒரு தயாரிப்பாக இருக்கும்.

ஆடி 18 ம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடும் நாள். விதவிதமான கலந்து வைத்த சாதங்கள் தயாரித்து கொண்டாடுவது வழக்கம். வழக்கமாக` செய்யும் சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த கல்கண்டு சாதம் வித்தியாசமான ஒரு தயாரிப்பாக இருக்கும். இதன் நிறமும் மணமும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வழக்கமான பொங்கலில் இருந்து மாறுபட்ட, வெள்ளை வெளேர் என்று இருக்கும். 

kalukandu satham

தேவையான பொருட்கள்
வடித்த சாதம்      -1கப்
கல்கண்டு          -1கப்
கிராம்பு                  -6
ஏலக்காய் பொடி    -1ஸ்பூன்
முந்திரி                 -5
திராட்சை                -5
நெய்              -50கிராம்

செய்முறை

kalukandu satham

கல்கண்டை தண்ணீர் விட்டு கரைய விடவும். பிறகு அதை கொதிக்க விடவும். கொதி வரும் நிலையில் தயார் செய்து வைத்த சாதத்தை போட்டு கலக்கவும். இறுகி வரும்போது நெய், முந்திரி, திராட்சை போட்டுக் கொள்ளவும். இவை அனைத்தையும் கலந்து, ஏலத்தூள் சேர்த்தால் அருமையான கல்கண்டு சாதம் தயார்.